Description
சுதாகர் எழுதிய இரண்டாவது நாவல் இது. முதல் நாவல் ஏற்கெனவே படித்தது. முதல் நாவலுக்கும் இரண்டாம் நாவலுக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமை. தகவல்கள். தகவல்கள். மேலும் தகவல்கள். சலிப்பூட்டாத வகையில் விறுவிறுப்பாக.ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியரின் அபார உழைப்பு தெரிகிறது. என்னைக் கவர்ந்த முக்கியமான விஷயம் ஓநாய்கள். கதையில் ஓநாய்கள் வருகின்றன. ஓநாய்கள் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆச்சரியமூட்டும் தகவல்கள். முக்கியமாக எளிதாகப் புரிகிற மாதிரி இருக்கின்றன.இருப்பதிலேயே புத்திசாலித்தனமான கேரக்டரை திருநெல்வேலி வட்டார வழக்கில் பேச வைத்துப் புகுந்து விளையாடி இருக்கிறார். இவரின் ஊர்ப்பாசம் தெரிகிறது. லேசாகப் புன்னகைக்கவும் வைக்கிறது.சும்மா தமிழ்ல சயன்ஸ் கதைகளே இல்லைங்க சுஜாதாவுக்கு அப்புறம் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு இவரது ரெண்டு புத்தகங்களையும் தாராளமாகப் பரிந்துரைக்கலாம்.