Description
பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்; மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம். அவனது கவிதைத் தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது- சூரியப் பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி, நெருப்பில் இழை பிரித்து நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியிலே நெய்தெடுக்கப்பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போர்த்துபவையுமான காவியப் பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே அவனது கவிதைப் புத்தகம். பாரதியின் கவிதைகளை முதல் முறையாக விளக்க உரையுடன் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.