Description
பேராசிரியை சந்திரிகா ராஜாராம். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்தவர். சிறுவயதிலிருந்தே இசையின் மீது கொண்ட தீராத ஆர்வத்தினால் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இசையில் தேர்ச்சிப் பெற்றார். பல இசைக் கச்சேரிகளும் செய்துள்ளார். சிறந்த தொகுப்பாளர், விமர்சகரான இவர் கவிதை, கட்டுரை எழுவதிலும் வல்லவர். ‘இதயம் பேசுகிறது’ மணியன் அவர்களால் எழுத்துலகத்திற்கு அறிமுகமாகி, கலைமாமணி விக்கிரமன் அவர்கள் தந்த ஊக்கத்தினால் ‘இலக்கிய பீடம்’ இதழிலும், தினமணி நாளிதழிலும், பல பத்திரிகைகயிலும் இசை குறித்த கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதி வருகிறார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களைப் பற்றி ‘இசைப் பயணம்’ என்ற புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார். கர்நாடக இசை மேதை டாக்டர் எம்.எல்.வி. ரசிகர் மன்றச் செயலாளராக தற்போது இருந்துவருகிறார். பாரதியார், பாரதிதாசன், கோபாலகிருஷ்ண பாரதி, அருணகிரிநாதர், ஆபிரகாம் பண்டிதர், தண்டபாணி தேசிகர் போன்றோரை பற்றி இப்புத்தகம் எடுத்து கூறும்.