Description
இன்றைய மருத்துவ உலகில் புதிய பெயர்களைக் கொண்ட நோய்களும், அதற்கான புதிய மருந்து கண்டுபிடிப்புகளும், அறுவை சிகிச்சை கருவிகளும் கண்டுபிடித்து வரும் நிலையில், ஊசி, மாத்திரை எதுவுமில்லாத மருந்தில்லா மருத்துவத்தில் (ரெய்கி) தனக்கென்று ஓர் தனியிடத்தைப் பிடித்து மருத்துவப் பணிகளைச் சத்தமில்லாமல்செவ்வனே செய்து வருகிறார் பேராசிரியர் டாக்டர் பி.எஸ். லலிதா. ரெய்கி, அக்குபஞ்சர், அக்குபிரஷர் ஆகிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் சிறப்பான பணிகளை தன்னலமில்லாமல் செய்து வருகிறார்.கால்நடை மருத்துவத் துறையில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்று 35 ஆண்டுகளாக இணை பேராசிரியராகப் பணியாற்றினார். பின் விருப்ப ஓய்வு பெற்று அக்குபஞ்சர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.மருந்தில்லா மருத்துவ சிகிச்சை முறையில் தனது கவனம் முழுவதையும் செலுத்தி, குறிப்பாக ரெய்கி என்னும் மருத்துவ சிகிச்சை முறையில் நோய்களை எளிமையான குணப்படுத்த முடியும் என்று நிரூபித்து காட்டிக்கொண்டிருக்கிறார்.மன அழுத்தம், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், முதுகுவலி, வாயுகோளாறு, மெனோபாஸ்,சைனஸ் போன்ற நோய்களுக்குசிகிச்சை அளித்து வருகிறார். தன்னை தேடி வரும் நோயாளிகளுக்கு சிசிக்கையுடன் தியானம் சொல்லித் தருகிறார். தற்போது பாரதிராஜா மருத்துவமனை, ஸ்ரீ ராமசந்திரா மெடிக்கல் சென்டர் ஆகியவற்றில் மருத்துவ ஆலோசகராக உள்ளார். வானொலிகளில், தொலைகாட்சிகளில் நோய்களைப் பற்றியும், ரெய்கி மூலம் நோய்கள் குணமாவதைப் பற்றியும் கூறிவருகிறார்.தன்வந்திரி அவார்டு, வைத்திய பூஷன் போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். 1997ம் ஆண்டு சர்வதேசப் பெண்மணியாக அமெரிக்க நிறுவனம் ஒன்று இவரைத் தேர்வு செய்தது.