Description
டாக்டர் ஹரீஷ்குமார், இயன்முறை மருத்துவர் (பிஸியோதெரபிஸ்ட்). இளம் வயதிலேயே பிரபலமடைந்த இவர் சென்னையில் பிரபலமான மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.எளிய பயிற்சியினை கொண்டு முதியோர்களுக்கென சிறப்பு முகாம்கள் நடத்தி வெற்றி கண்டவர். ‘கிட்ஸ் ஆரோக்யா’ என்ற பெயரில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக எளிய உடற்பயிற்சிகளைக் கொண்டு, மயிலை முத்துக்கள் பத்திரிகையுடன் இணைந்து பல பள்ளிகளில் முகாம்களை நடத்தி பாராட்டைப் பெற்றவர்.தன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெற்ற அனுபவத்தை ‘மயிலை முத்துக்கள்’ பத்திரிகையில் தொடராக எழுதி வந்தார். அத்தொடரின் தொகுப்பே இந்தப் புத்தகம்.மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு வலி என எல்லா வலிகளைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் படிப்பவர் அனைவரும் புரியும் வண்ணம் மிக எளிமையாக நடையில் எழுதியுள்ளார்.