1% தீர்வு


Author: தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

Pages: 167

Year: 2014

Price:
Sale priceRs. 250.00

Description

தங்கப் பதக்கம் வென்றுள்ள ஒலிம்பிக் வீர்ர்கள், அமெரிக்க அதிரடிப் படையினர், விருதுகள் பெற்றுள்ள விற்பனையாளர்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிற வெற்றியாளர்களிடையே காணப்படும் ஓர் ஒற்றுமை என்னவென்று தெரியுமா?

அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான 1 சதவீதத் தீர்வை அறிந்து வைத்துள்ளனர்.

இப்போது அதை உங்களாலும் கற்றுக் கொள்ள முடியும்!

அது எப்படிச் சாத்தியம் என்பதை மிகப் பிரபலமான பேச்சாளரும், விற்பனையில் சாதனைகள் படைத்துள்ள புத்தகங்களை எழுதியுள்ளவருமான டாம் கானல்லன், இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

வெற்றியாளர்கள் ஒருபோதும் பிறரைவிட 100 சதவீதம் மேலானவர்களாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அவர்கள் பல விஷயங்களில் மற்றவர்களைவிட 1 சதவீதம் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒலிம்பிக் பந்தய வீரர், பதக்கம் எதுவும் பெறாத, நான்காவது இடத்தில் இருக்கும் வீரரைவிட ஒரே ஒரு சதவீதம் மட்டுமே அதிக வேகமாக ஓடி வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சின்னச் சின்ன விஷயங்கள் பலவற்றில் ஒரே ஒரு சதவீத மேம்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களால் உங்கள் வாழ்க்கையில் எப்படி நிரந்தரமான, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இப்புத்தகம் எளிமையான முறையில் விளக்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள, எளிதாகச் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றைத் தொடர்ந்து கடைபிடித்துவர வேண்டும், அவ்வளவுதான்.

நீங்கள் அப்படிச் செய்வீர்களேயானால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் விளைவுகள் உங்களை பிரமிக்க வைக்கும் என்பது உறுதி!

You may also like

Recently viewed