Description
தந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள "தந்த்ரா உலகம்' என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது."விஞ்ஞான் பைரவ் தந்த்ரா' என்ற வார்த்தைகளின் பொருள் "உணர்வு தாண்டிப் போகும் யுக்தி'. விஞ்ஞான் என்றால் உணர்வு; "பைரவ்' என்றால் உணர்வு கடந்த நிலை; தந்த்ரா என்றால் யுக்தி, வழி, முறை டெக்னிக். எனவே, இது விஞ்ஞானபூர்வமானது. விஞ்ஞானம் "ஏன்' என்பதில் அக்கறையுடையதல்ல; "எப்படி' என்பதில் அக்கறையுடையது என்று விளக்கமளிக்கிறது தந்த்ரா உலகம்."உனக்குப் பொருந்துகின்ற ஓர் உத்தியைத் தேர்ந்தெடு. உன் முழு சக்தியையும் அதில் கொடு. அதன்பின் நீ பழைய ஆளாகக் கண்டிப்பாக இருக்க மாட்டாய். மனம் எங்கு இல்லையோ அதுவே பைரவ்வின் நிலை - மனமற்ற நிலை. உனக்குக் குறைவாகத் தெரிந்த அளவு மிகவும் நல்லது. வாழ்வு ஓர் அற்புதம்! நீ அதன் புதிரை அறியவில்லை என்றால், அதை எப்படி அணுகுவது என்பதை நீ அறியவில்லை என்பதையே காட்டுகிறது' என்கிறது தந்த்ரா.