தியானத்தின் பாதை

Save 7%

Author: ஓஷோ

Pages: 256

Year: 2013

Price:
Sale priceRs. 260.00 Regular priceRs. 280.00

Description

ராஜஸ்தானில் ஓஷோவின் முதல் தியானப் பாசறை நடந்தபோது அவரால் கொடுக்கப்பட்ட தொடர் பேருரைகளின் தொகுப்பே இந்நூல் ..!
மனிதம் என்பதைக் குறித்து ஓர் அசாதாரண மனிதன் கொண்டிருந்த பார்வையின் அறிமுகமே. இந்த உரைகளின் சாரம், இன்றுவரை உலகெங்கிலும் உள்ள எண்ணிலடங்கா மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு எழுச்சியுறச் செய்யும் நூல் இது. சவால்கள் பல நிறைந்துள்ள
தினசரி வாழ்க்கையின் அல்லாட்டங்களுக்கு இடையே தியானம், உள்ளார்ந்த உருமாற்றம், இளைப்பாறுதல் போன்றவற்றை கைகூட வைத்துவிடத் துடிக்கும் பலரது தேடுதல்களுக்கும் அபூர்வ ஊக்கத்துக்குமான கட்டுரைகள் இவை!
தியானம் என்றால் என்ன என்பது தொடர்பான அடிப்படைக் கேள்விகளுக்கு ஓஷோ இந்நூலில் பதில் தந்துள்ளார். தியானத்தை எப்படித் தொடங்கி அதனைத் தொய்ந்து போகாமல் நம் வாழ்க்கையில் எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது என்று விளக்கியுள்ளார். இந்த இலக்கினைத்
துல்லியமாய், தீர்க்கமாய், ஹாஸ்யம் நிறைந்த கனிவுடன் அளித்துள்ளார். இறைமை என்றால் என்ன என்பதையும், அந்த ஞானத்தை எப்படி அடுத்தவருக்கு வழங்குவது என்பதையும் அறிந்துவைத்துள்ள ஒருவர் இதோ இருக்கிறார். முழு மேதமை பறக்க எப்படியெல்லாம் வார்த்தை போட்டு விளக்க முடியுமோ அப்படியெல்லாம் விளக்கி , உள்ளார்ந்த சுயம் எனும் ஆன்ம அமைதிப் பிரதேசம் நோக்கி அழைத்துச் செல்கிறார்.

You may also like

Recently viewed