Description
இந்த நாவலில் அறுநூறு வருட வாழ்க்கை ஒரு குடும்பத்தின் நிகழ்வுகலாகச் சொல்லப்படுகிறது. பெண் தெய்வங்கள் தங்களை அழித்துக் கொண்டு மற்றவைகளைக் காப்பதாக பல வழக்குக் கதைகள் இருந்தாலும் இந்நாவலில் வருகிற நொண்டி மீனாட்சி என்கிறபெண் தனி ஒருவளாக தன் தங்கையையும் அவளது வம்சத்தையும் நிலைநிறுத்தப் பலபோராட்டங்களை மேற்கொள்கிறாள். அவளது கதையை மிக அருமையாகச் சொல்லி இருக்கிறார் நன்பர் ராஜேந்திரன். நான் இதை நாவலாகவே பார்க்கிறேன். அப்படி தான்பார்க்க முடியும். ஒருவர் பார்வையிலான சுயசரிதை அல்லது ஒற்றை வாழ்க்கை, பலவகையிலும் அவர் வாழுகிற சமூகமும் சார்ந்ததே.
- கலாப்ரியா