திப்பு சுல்தான்


Author: மொஹிபுல் ஹசன்

Pages: 0

Year: 2014

Price:
Sale priceRs. 600.00

Description

இன்று இந்திய சுதந்திர போராட்டத்தின் ஈடு இணையற்ற மாவீரன் - மைசூர் வேங்கை *திப்புசுல்தான் வெள்ளையர்களால் வீழ்த்தப்பட்ட தினமான மே 4!*
வீரம் சொரிந்த இத்தினத்தை முன்னிட்டு *Unique Books* வழங்கும் .........
*திப்பு சுல்தான் - மொஹிபுல் ஹசன்*
*திப்பு சுல்தான்*
இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில் இல்லை .....! இல்லை....!
முதல் பத்தியில் இல்லை ......! இல்லை....!முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர்.
திப்புசுல்தானின் பெயரானது
கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் *அச்சீலஸைப்* போன்று மறந்துவிட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட வரலாறாகும்.
அவ்வரலாற்றுப் பக்கங்களை இன்றைய தினத்தில் மீட்டெடுக்கும் வாய்ப்புக்காக இந்நூலை பரிந்துரைக்கின்றது உங்கள் *Unique Books*.
எத்தனையோ சமஸ்தானங்களையும் - அரசாங்கத்தினையும் ஆங்கிலேயர்கள் வீழ்த்தியபின் கூறாத வார்த்தையான *இந்தியா இனி நம்முடையது * என்று *திப்புவை* கொன்றபின் *ஆங்கிலேய படைத்தளபதி ஹாரிஸ் பிரிட்டன் மாகாராணி சார்லோட்டிடம்* கூறினார்.
*மொஹிபுல் ஹசன்* எழுதிய இப்புத்தகத்தில் *திப்புசுல்தானின் அரசாங்கமும் - அதை அவர் நடத்திய விதமும் - அவரது இராணுவமும் - அதன்மூலம் அவர் செய்த சீர்திருத்தங்களும் - அவர்தம் மதச்சார்பற்ற கொள்கைகளும் - தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும் - அவரின் சமூகரீதியான சமத்துவமும் - அவரது குணாதிசியங்களையும் இன்றைய தலைமுறையினருக்கு புரியும் நிலையிலிருந்து பல படிகளாக ஆய்வறிக்கைகளாக முன்னிருத்தப்பட்டுள்ளது.

You may also like

Recently viewed