Description
பின்நவீனத்துவம் என்பது அர்த்தமற்றது, அறிவுஜீவிகள் சிலரின் புத்திபூர்வ விளையாட்டுகளின் தொகுப்பு எனக் கடுகடுத்த விமர்சகர்கள் நினைக்கின்றனர். மாறாக, நமது காலத்தின் மிக அழமான, ஆன்மிக, தத்துவ நெருக்கடிகளுக்கு, அறிவொளியின் தோல்விக்கு எதிர்வினை அது. ஜிம் பவல் மாறிவருகின்ற உலகினூடாக, மக்களுக்கு வழிதேடப் பயன்படும் ‘நிலப்படங்களின்’ தொடர்ச்சியே பின்நவீனத்துவம் என்னும் நிலைப்பாட்டைக் கொள்கின்றார். ஃபூக்கோவின் அறிவு அதிகாரம், ஜேம்சனின் பின்நவீனத்துவ வரைபடமாக்கல், பூத்ரியாரின் ஊடகங்கள், ஹார்வியின் காலம்-வெளி குறுக்கல், தெரிதாவின் தகர்ப்பமைப்பு, தெலூஸ், கத்தாரி ஆகியோரின் நிலத்தடித் தண்டுகள் ஆகிய சிந்தனைகளைப் ‘பின்நவீனத்துவம்:தொடக்கநிலையினருக்கு’ என்னும் இந்த நூல் தருகின்றது. பின்நவீனத்துவச் செயற்கைகளான மடோனா, சைபர்பங்க் பற்றியும் அறிவியல் புதினங்கள், பௌத்தச் சூழலியல், டெலிடில்டானிக்ஸ் பற்றியும் இந்நூல் விவாதிக்கின்றது.