Description
ஜென் பற்றிய நூலை உருவாக்குவது பெரும் சாகசம், புத்தத்தின் இந்த வசீகரமான மரபு குறித்த தகவல்களை வரலாறாக விவரிப்பது எளிய வழி. ஆனால் ஜென் குருக்களின் விநோதமான ஞானத்தையும் விந்தையான நகைச்சுவை உணர்வையும் ஞானம் பெறும் அனுபவத்தை மாணவர்களுக்குக் கடத்தும் அதீத இயல்பையும் தெளிவுபடுத்துவது அசாத்தியமானது. ஜென்: தொடக்கநிலையினருக்கு என்னும் இந்த நூலை எழுதிய ஆசிரியர்கள் கடினமான இந்தச் சாகசத்தைச் செய்திருக்கிறார்கள். தெளிவான தகவல்கள், செறிவான எழுத்து, அருமையான விளக்கப்படங்கள் ஆகியவற்றின் அற்புதச் சேர்க்கையைப் பயன்படுத்திச் சீன, ஜப்பானியப் பண்பாடுகள் மீது ஜென் ஏற்படுத்திய பாதிப்பையும் ஆலன் கின்ஸ்பர்க், ஜாக் கெருவாக், கேரி ஸ்னைடர் போன்ற அமெரிக்க எழுத்தாளர்கள்மீது உண்டாக்கிய தாக்கத்தையும் இந்நூல் பதிவுசெய்கிறது.