Description
ஆசிரியர் - ஷோபாசக்தி நிர்வாணம் மீது நிலவு தனது ஒளியை பாய்ச்சி நீர்மேல் நிற்கலாயிற்று. குளத்தின் மையத்தில் அமையாள் கிழவி பிறந்த மேனியாக மல்லாக்க நீந்திக்கொண்டிருந்தார். அப்போது பெரிய பள்ளன் குளத்தில் கார்த்திகை மாதச் சாமமாயிருந்தது. அமையாள் கிழவியின் முகம் நிலவைப் பார்த்திருக்க அவளது கைகள் மீனின் செட்டைகள் போல் மெதுவாக அசைந்துக்கொண்டிருக்க அவளது கால்கள் மச்சத்தின் வாற்பகுதி போல நீரை அனிச்சையில் அணைந்துகொண்டிருக்க கிழவியின் வற்றிக் கிடந்த சரீரம் குளத்துத் தண்ணீரின் மீது சருகு போல மிதந்தது. அவரது கூந்தல் அவரின் நிர்வாணத்தை ஏந்திப்பிடித்து நீரில் வெள்ளைத் தோகையாய் விரிந்துக் கிடக்க, அம்மையாள் கிழவியின் முலைகள் சுரந்த திரவம் குளத்தில் படலமாய் மிதந்தது. அடர்ந்தும் நரையேறியும் கிடந்த உரோமங்களின் நடுவே அமையாள் கிழவியின் யோனிவாசல் திறந்திருந்ததை நிலவு கண்டது. அப்போது ‘அம்மா’ என்றொரு ஓலத்தைஇ நிலவு கேட்டது. அந்த ஓலம் சாவின் ஓலமென நிலவு அறிந்தது. அது தனது ஒளியை எடுத்துக் கொண்டு சாவை நோக்கி நகரலாயிற்று. BOX என்பது என்ன? அது நான்கு புறமும் சூழப்பட்டு நெருக்கப்படுவது. பத்ம வியூகம். நாவலின் ஆரம்பத்தில் ஒரு சிறிய அட்டைப் பெட்டிக்குள் நிர்வாணமாக மணிக்கணக்கில் நிற்கவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப் படும் இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களின் பாதங்கள் லேசாகப் பெட்டியை விட்டு நகர்ந்தாலும் அவர்கள் விரல்கள் நறுக்கப்படுகின்றன. பிறகு, யுத்தத்தில் நாலாபுறமும் போராளிகள் சூழப்பட்டு வெளியேற முடியாதபடி பாக்ஸ் அடிக்கப்படுகிறார்கள்.இடையறாத பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின் கொடூரமாகச் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்படும் பெண் போராளிகளின் கதைகள், சிங்கள ராணுவத்தின் சித்ரவதை முகாம்களில் நிர்வாணமாக மாடிப் படிகளில் படுக்க வைத்து, இழுத்துவரப்பட்டு, மண்டை உடைத்துக் கொல்லப்படும் இளைஞர்களின் கதைகள், புலிகளின் ரகசியச் சிறைச்சாலைகளில் கொடூரமாகக் கொல்லப்படும் கைதிகளின் கதைகள் என நமது அரசியல் சார்புகளுக்கும் லட்சியவாதங்களுக்கும் அப்பாற்பட்டு எல்லாத் தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட வதைகளின் கதைகளைத்தான் இந்த நாவல் சொல்கிறது.-மனுஷ்யபுத்திரன், தி ஹிந்து விமர்சனத்தில்2015 - ஆண்டிற்கான விகடன் விருது பெற்றவை