Description
ஹிந்துத்துவ சிறுகதைகள் - அரவிந்தன் நீலகண்டன் - தடம் பதிப்பகம்.பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயசமாக தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு. பாரதியார் அவரது காலத்தில் பிரசாரக் கதைகளை சமூக மேம்பாட்டுக்கும் விடுதலை விழிப்புணர்வுக்கும் பயன்படுத்தினார். பிற்காலத்தில் திராவிடப் பிரசாரக் கதைகளில் அறுந்துபோன அத்தொடர்ச்சியை இக்கதைகள் தக்கவைப்பது மட்டுமில்லாமல், புதியதொரு பரிமாணத்தையும் உச்சத்தையும் தொடுகின்றன. வெற்றுப் பிரசாரக் கதைகளின் பின்புலமாக வெறுப்புணர்வை வைத்து உருவாக்கப்பட்ட திராவிடப் பிரசாரக் கதைகளில் இருந்து முற்றிலும் விலகி, வரலாற்றுப் பின்னணியில் இந்திய உணர்வுடன் வெளிவரும் சிறுகதைகளை இத்தொகுப்பில் நாம் விழிவிரிய வாசிக்கலாம்.சுருக்கமாகச் சொன்னால், பாரதப் பண்பாட்டில் வேர்கொண்டு நம் மரபின் மகத்துவக்கொடியைப் பறக்கவிடும் கதைகள் இவை எனலாம்.-அரவிந்தன் நீலகண்டன் ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து எழுதி வரும் தீவிரமான எழுத்தாளர். இவரது கட்டுரைகள் தொடர்ந்து விவாதத்தை எழுப்பியவண்ணம் உள்ளவை.அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகங்கள்:*கடவுளும் 40 ஹெர்ட்ஸும்*ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம்*உடையும் இந்தியா*பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்*ஆழி பெரிது*நம்பக்கூடாத கடவுள்*நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்