Description
பிரிட்டிஷாருக்கு முந்தைய பாரதத்தில் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பங்கள், சமூக அமைப்புகள், சமூக ஒழுங்குகள், தத்துவங்கள் என பாரதத்தின் கடந்த காலத்தை மாறுபட்ட கோணத்தில் அலசி ஆராயும் நூல்.காந்தியவாதியும் வரலாற்றாய்வாளருமான தரம்பால் பிரிட்டிஷ் ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு 18ம் நூற்றாண்டு இந்தியாவின் சித்திரத்தை உருவாக்கி இருக்கிறார். மறைக்கப்பட்ட பாரதம் நூலின் முதல் பாதி தரம்பாலின் நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் பாதி இந்திய சாதிய சமூகம் குறித்து இதுவரை பேசப்படாத விஷயங்களை புதிய கோணத்தில் அறிமுகம் செய்துவைக்கிறது.இந்தியாவின் சாதி அமைப்பு உலகிலேயே மிகவும் கொடூரமானது - இந்தியாவின் சாதி அமைப்பு உலகிலேயே உன்னதமானது’ என்ற இரண்டு எதிர்நிலைகளுக்கு நடுவே சாதியின் உண்மைநிலை மற்றும் சமூகப் பங்களிப்பு, அதன் முக்கியத்துவம், அதில் வரவேண்டிய சீர்திருத்தங்கள் என இந்திய சாதி அமைப்பைப் பற்றிய கருத்துகளை மறுபரிசீலனை செய்யும்படி வாசகர்களை இந்த நூல் கேட்டுக்கொள்கிறது.