காலம்தோறும் நரசிங்கம்


Author: ஜடாயு

Pages: 204

Year: 2015

Price:
Sale priceRs. 130.00

Description

இந்து ஞானத்திலும் இந்திய சிந்தனை மரபிலும் மையம்கொண்டு சமூகம், வரலாறு, கலை, கலாசாரம் எனப் பலதளங்களில் விரியும் கட்டுரைகளின் தொகுப்பு இது. ராமாயணத்தின் பரிமாணங்கள், ஐயப்ப வழிபாட்டின் வேர்கள், சைவசமயம் குறித்த விவாதம், சிற்பக்கலைத் தேடல்கள், ஹிந்துத்துவம், மதமாற்றம், சாதியம், சூழலியல் குறித்த கண்ணோட்டங்கள் என்று வலைப்பின்னலாக இக்கட்டுரைகளின் பேசுபொருள்கள் அமைந்துள்ளன.நீண்ட நெடிய வரலாறுகொண்ட நமது பண்பாட்டின் கூறுகளையும், நிகழ்காலத்தின் சமூக, கலாசாரப் போக்குகளையும் இணைத்து சிந்திக்கும் பார்வையை இவை அளிக்கின்றன. வியாசரையும் விவேகானந்தரையும், காரைக்காலம்மையையும் பாரதியையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் அம்பேத்கரையும், காந்தியையும் கலாமையும் ஒரு சரடாக இணைக்கும் பண்பாட்டு உயிர்ப்பின் நரம்பைத் தொட்டு இவை அடையாளம் காட்டுகின்றன. ஜடாயு 2005ம் ஆண்டுமுதல் இணையத்தில் இந்துமதம், கலாசாரம், வரலாறு, சமகால சமூக அரசியல் போக்குகள் ஆகியவை குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். தீவிரமான விவாதங்களிலும் பங்கேற்றுள்ளார். கம்பராமாயணத்தில் புலமையும், நவீன இலக்கிய வாசிப்பில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தமிழ்ஹிந்து (www.TamilHindu.com) இணையத்தளத்தின் ஆசியர் குழு உறுப்பினர். மின்னணு தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.இவரது இயற்பெயர் சங்கரநாராயணன்.

You may also like

Recently viewed