Description
சாரு நிவேதிதாவின் கட்டுரைகளை ஒரு பொதுக் கலாச்சாரத்தின் மீதான எதிர்க்குரல் என்று சொல்லலாம். சில சமயம் ஒரு கலாச்சார அன்னியனின் பண்பாட்டுத்தனிமை என்றும் சொல்லலாம். சமூகத்தின் வாழ்வின் பல்வேறு தளங்களையும் களங்களையும் நுண் அரசியல் பார்வையோடு நேர்த்தியாக எழுதிச் செல்கிறார் சாரு.ஆழமான அனுபவங்களை வெளிப்படுத்தும் தருணங்களுடன் சமூக வாழ்வின் அபத்தங்களை வாழ்வின் வினோதங்களையும் சாரு வாசிப்பின் இன்பம் தணியாத நடையில் வரைகிறார்.

