Description
தமிழ் சினிமாவின் எல்லைக்கற்கள் எனச்சொல்லத்தக்க படங்களை எடுத்து எழுபதுகள் எண்பதுகள் என்பதனை தமிழ் சினிமாவின் பொற்காலம் என நினைவுகூர வைத்த இருவர் பாலுமகேந்திராவும் மகேந்திரனும். இவர்களது படங்களான வீடு, முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் என்பன தமிழ் சினிமாவின் அதுவரைத்திய அழகியலை ஒளிப்பதிவு மற்றும் யதார்த்த வாழ்வு எனும் முனைகளில் மாற்றியமைத்தது. தமிழின் மிக முக்கியமான திரைவிமர்சகர்கள், பாலுமகேந்திராவும் மகேந்திரனும் புதிய அலைபோல் எழுந்து தமிழ் சினிமாவில் உருவாக்கிய அந்த அழகியல் அடிப்படைகள் எத்தகையன என்பதை இந்தத் தொகுப்பின் கட்டுரைகளில் அலசுகிறார்கள்.