Description
வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் சினிமா புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. ''இப்போது நிறைய இளம் இயக்குனர்கள் புதிது புதிதாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள், தமிழ் சினிமாவில் புதிய அலை வீசத் தொடங்கியிருக்கிறது'', போன்ற வாதங்களை நாம் தொடர்ச்சியாக கேட்கமுடிகிறது. இளம் தலைமுறையைச் சார்ந்த இயக்குனர்கள், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வார்கள் என்கிற அந்த வாதம் உண்மைதானா? என்பதைப் பகுப்பாய்வு செய்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். புதிய அலை இயக்குனர்கள், எந்த விதத்தில் தனித்துத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்? சினிமா குறித்த அவர்களின் பார்வை? சினிமா எனும் கலைவடிவத்தை அணுகும் விதம்? எனப் பல்வேறு கேள்விகளுக்கு, பத்து இயக்குனர்களின் நேர்காணல்கள் வாயிலாகவே பதிலை முன்வைத்திருக்கிறோம்.