Description
உயர்திணை முதல் அஃறிணை வரை அனைத்து உயிர்களையும் தன்வசப்படுத்தும் இயல்புள்ளது இசை. பண்டிதன் முதல் பாமரன் வரை ரசிக்கும், ருசிக்கும், பரவசப்படும் மகத்துவம் கொண்டது இசை. கலைகளில் ஓவியம் சிறந்ததாய் இருக்கலாம். ஆனால் இசைதான் எல்லோரையும் ஈர்க்கிறது, கேட்பவர் மனதில் இன்பத்தை வார்க்கிறது. புகழ்பெற்ற இசைப் பாடகர்களைப் பற்றி, இசையமைப் பாளர்களைப் பற்றி, இசைக் கலைஞர்களைப் பற்றி, இசைக் கலாசாரங்களைப் பற்றி, இசை வகைமைகளைப் பற்றி, சுவை குன்றாத சிறுகதைப் போக்கில் பேசுகிறது இந்த நூல். பாப் மார்லி போன்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்களின் தனித் திறன்களையும் இந்தி, தமிழ், மலையாள திரைப்பட இசையமைப்பாளர்கள் பற்றியும், பின்னணிப் பாடகர்களின் தனித்துவமான குரல் வளம் பற்றியும் விரிவாக ஆய்வு நோக்கில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் ஷாஜி. பல இசை நிறுவனங்களில் இசைப் பதிவு மேலாளராகப் பணியாற்றியபோது, தனக்கு கிடைத்த அனுபவங்களையும் தான் சந்தித்த இசை ஆளுமைகளைப் பற்றியும் சமரசம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் ஷாஜி. 2005 முதல் 2015 வரை இசை தொடர்பாக ஷாஜி எழுதிய மொத்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது! இசை மட்டுமல்ல இசை தொடர்பான சம்பவங்களும் சுவாரஸ்யமானதே...