Description
பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அது போலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும். ஒரு இளைஞன் அல்லது யுவதிக்கு அது உத்வேகமளித்து தனது கனவை நிறைவேற்றிக் கொள்ளத் தூண்டினால், எனது முயற்சிக்கு நிஜமான பலன் கிடைத்திருக்கிறது என்று நான் எண்ணிக் கொள்வேன். கடந்த பத்தாண்டுகளில் எனக்கு இளைஞர்களிடமிருந்து வந்த கடிதங்கள், கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கான பதில்கள் எல்லாம் வாழ்வில் நான் கற்றுக் கொண்ட சுயஅனுபவங்கள் சார்ந்தவை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் அதே விதமான பிரச்சினைகளையோ அல்லது சூழ்நிலைகளையோ எதிர்கொள்ள நேர்ந்திருக்கலாம். எனவே எல்லாப் பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் பொதுப் பண்புகள் கொண்ட செய்திகளாக அமையும்படி எனது பதில்கள் தரப்பட்டுள்ளன."