இந்துக்கள் யாரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டாம்


Author: தவம்

Pages: 0

Year: 2016

Price:
Sale priceRs. 145.00

Description

“தவம்”... இவனது இயற்பெயர் தவமுருகன், “உரத்தூர் ஜம் ஜம்தார் பட்டம்” இவன் பிறந்து, வளர்ந்து வாழும் கிராமம், இப்போது கி.பி. 21ஆம் நூற்றாண்டு உலகமே நமது உள்ளங்கைகளுக்குள் வந்துவிட்டது. ஆனால் இன்றும் இவன் பிறந்த ஊரில் ஒரு ‘டீ’ கடை கூட இல்லாத நிலைமை. இவன் வறுமையின் விந்தில் பிறந்தவன் என்று கூட சொல்லலாம். இவனுக்கு 4 சகோதரிகள். இவற்றை எல்லாம் தாண்டி இவனது வெற்றி என்னவாக இருந்திருக்க கூடும். இவனை வழிநடத்தி செல்லும் இன்னொரு மிக பெரிய சக்தி இவன் வாசிக்கும் புத்தகம் தான். புத்தகம் வாசிப்பதில் தொடங்கி இவனும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறான். புத்தகத்தின் பெயர் “ தவத்தின் தாகம்.” தன்னை தவமிருந்து ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு பெருமை சேர்ந்து விட்டோம் என்று நம்பினான். தன் புத்தக வெளியீட்டு விழாவில் தன் தந்தை சிந்திய ஆனந்த கண்ணீரை பார்த்து.

உழைப்பதில் சோம்பேறிகளுக்கு எதிர்மறை இவன். தான் வாழும் ஒவ்வொரு நொடியையும் உணர்ந்து வாழ்கிறான். இவன் தூங்கும் நொடிகளை தவிர மற்ற அனைத்து நொடிகளையும் அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்பதே இவனது சிந்தனை. தான் வாழ்ந்து முடித்து., கடைசி காலத்தில் தன் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது, அந்த வாழ்க்கை ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையாக இருந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருப்பவன்.

You may also like

Recently viewed