Description
இவ்வளவு முக்கியமான பங்களிப்பைச் செய்யும் ஒளிப்பதிவாளன் தன்னைப் போதுமான அளவுக்குத் தயார்ப்படுத்திக் கொள்வது அவசியம். தன்னுடைய அறிதல் பரப்பை விரிவுபடுத்திக் கொள்வதும், தன் ஆர்வங்களைப் பன்முகத் தன்மை கொண்டதாக ஆக்கிக்கொள்வதும் அவசியம். அதற்கான வித்துக்களை, அத்துறையில் நுழையும் இளைஞர்களுக்கு அளிக்கக்கூடியதாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பு. - சார்லஸ், திரைப்பட இயக்குனர்