Description
தமிழ்ச் சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு வெளி குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர், பெரியார் தொடங்கி அஜித்குமாரின் பிம்பக் கட்டமைப்பு, சிம்புவின் பீப் சாங் என்று பல்வேறு அம்சங்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் கருத்தியல் குறித்தும் மாற்றுப்பார்வைகளை இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன. சிறுபத்திரிகைகள், நெடுந்தொடர், தலித் நாவல் என்று முன்வைக்கப்பட்ட கதைப்புத்தகம், சாதி காப்பாற்றும் சினிமாக்கள், ஆபாசத்தை எதிர்க்கும் தமிழ் மனநிலையின் போலித்தனம் என்று பலதளங்களிலும் சிந்தனையை உசுப்பும் இந்தக் கட்டுரைகள் தொடர்ச்சியான உரையாடலைக் கோருகின்றன. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு தலைமுறை உருவாகியுள்ள இன்றைய நிலை, சாதியமும் மதவாதமும் வெவ்வேறு வடிவங்களில் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளும் அபாயகரமான சூழல் என்னும் சமகாலத்தின் வெளிச்சத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியவை சுகுணா திவாகரின் இந்தக் கட்டுரைகள்.