Description
1988, ஆகஸ்ட் மாதக் கணையாழியில் வெளியான ‘நிகழ்வு’ என்னும் மிகச்சிறு சிறுகதையே ஒர் இதழில் வெளியான எனது முதல் சிறுகதை. 2015 ஜனவரியில் காலச்சுவடு இதழில் வெளியான ‘மாலை நேரத் தேநீர்’ கடைசிக் கதை. அதற்குப் பின் இந்த இரண்டாண்டுகளில் ஒரு கதைகூட எழுதவில்லை. ஏற்கனவே நான்கு தொகுப்புகளாக வெளியானவை, நூல்களில் இடம்பெறாதவை அனைத்தும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பு இது. மேலும் இக்கதைகள் என் இலக்கிய ஆற்றலின் போக்கை உணர்த்தும் பெரும்சான்றாக விளங்கி வாசிப்போரின் அனுபவ வெளியை விரிவாக்கும் எனவும் நம்புகிறேன். - பெருமாள்முருகன்.