Description
சோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம் , பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும், அதேவேளையில்உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரைவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவமைத்திட இக்கட்டுரைகள் கருத்துகளை வழங்கக்கூடும். இனக்குழுக் கலாச்சார மரபு ஆழமாக வேர்பிடித்துள்ள இந்திய உபகண்டச் சமூகங்களின் ஆழ்மனங்களில் எதார்த்தங்களைக் காட்டிலும் அவைபற்றிய புனைவுகள் வலுவாக இயங்குகின்றன.