Description
இலங்கை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தமதமும் இன பிரச்சனையும் தான். ஆனால் இன்றைய இலங்கை சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தனித் தீவல்ல. இந்தியாவின் நீட்சியாகவே இருந்தது. அப்படியானால் சிங்களவர் யார் ? அவர்களின் பூர்வீகம் என்ன? எங்கிருந்து சென்றார்கள் போன்ற வினாக்களுக்கு பக்தவத்சல பாரதியின் இந்நூல் சமூக- பண்பாட்டு மானிடவியல் நோக்கில் விடையளிக்கிறது. இதை சிங்கள மொழி , ஶ்ரீலங்கா உருவாக்கம், இனத்துவம் போன்றவற்றினூடாக சிங்களவர்களின் பண்பாடு, சாதிமுறை , திருமணம், அவர்களிடையே நிலவும் உறவுமுறை முதலியவற்றையும் தனித்தனி இயல்களில் காட்சிப்படுத்துகிறார்.சிங்களவர்கள் இந்திய இனத் தொடர்ச்சி கொண்டவர்கள் என்றாலும் மரபணு ரீதியான நெருக்கம் தமிழர்களுடன் தான் அதிகம் என்றும் அவர்கள் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சி கொண்டவர்கள் எறும் பாரதி கூறுவது ஆர்வமூட்டுவதாக இருக்கின்றன.