வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பொன்வண்டுகளை அழகியலாகவும், கரப்பான்கள், பூரான், புழுக்களை அருவருப்புடன் பார்க்கும் சிந்தனை போக்கு நம் அனைவர் மனத்தில் ஏதேனும் ஒரு மூலையில் படிந்துள்ளது. இதற்கான காரணங்கள் அல்லது அச்சம் எப்போது தோற்றம் கொள்ள ஆரம்பித்தது என்பது தனித்த ஆய்விற்குரியது.