Description
உலகளாவிய சந்தையில் ஒன்றிணைவது, வளரும் நாடுகளில் மரபுவழி வருகின்ற மதநம்பிக்கையின் சக்தியைப் பலவீனப்படுத்துகிறது என்று பாரம்பரிய ஞானம் சொல்கிறது. ஆனால் இந்தப் புதுவழி வகுக்கும் நூலில் மீரா நந்தா இன்றைய இந்தியாவில் இப்படி நிகழவில்லை என்று வாதிடுகிறார், மதச்சார்பின்மை வளர்ந்து வருகிறது என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, குறிப்பிடத் தக்கவாறு இந்துமதமும் நவ-தாராளக் கருத்தியலும் பின்னிப் பிணைதலை இந்தியா கண்டுவருகிறது. இது வளரும் முதலாளித்துவ வகுப்பினால் தூண்டவும்படுகிறது. இதன் விளைவாக, அரசு நிறுவனங்களை இந்து நிறுவனங்கள் இடம்பெயர்க்கின்றன. இந்துப் புத்துயிர்ப்பே ' ஒரு பெருவணிகமாக, மூலதனக் குவிப்பிற்கு ஒரு முக்கிய ஆதாரமாக மாறிவிட்டது. இந்த வளர்ச்சியின் வேர்களைத் தேடுவதோடு, அதன் எதிர்காலச் சாத்தியம் பற்றியும், உலகின் இரண்டாவது மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் மதச்சார்பின்மை, சமதர்மம் இவற்றின் போராட்டம் பற்றியும் மீரா நந்தா இந்த நூலில் விவரிக்கிறா