Description
தங்கத்திற்குச் சமூகம் கொடுக்கும் மதிப்பு, ஒரு மாபெரும் பொருளாதாரப் புதிர். நவீன பயன்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருக்கும் பரந்த உலகில் தங்கம் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. தங்கம் எப்போது, எவ்வாறு மனித உலகத்திற்குள் நுழைந்து பணமாக மாறியது? பேராசிரியர் அனிக்கின் இந்தப் புத்தகத்தில் தங்கம் என்னும் மஞ்சள் உலோகம் எவ்வாறு தோண்டி எடுக்கப்படுகிறது என்பதில் தொடங்கி, உலகத்திலுள்ள தங்கம் அனைத்தும் எங்கே செல்கிறது என்று படம்போட்டுக் காட்டுவது மூலம் நம்மை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். மேலும் தங்கத்திற்காக நடந்த இனப்படுகொலை பற்றியும் தேசங்களின் வரலாறு, பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றின் மீது தங்கம் வைத்திருக்கும் கடுமையான பிடி என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார்.