வேதாந்தம் இனிது


Author: எ.கொண்டல்ராஜ்

Pages: 0

Year: 2017

Price:
Sale priceRs. 130.00

Description

நம்வாழ்வின் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை வேதாந்தம் கூறுகிறது. வேதாந்தம் உணர்ந்தவர், வேற்றுமை பாரார் என்றும், ஜாதி, மத, இன பேதமின்றி, ஒரே ஆன்மா என்ற மெய்ப்பொருள் தத்துவத்தைக் கடைபிடிப்பர் என்பர். இந்நுால், 22 கட்டுரைகளில் வேதாந்த விளக்கத்தைக் கூறுகிறது.
ஆதிசங்கரர், 581 சுலோகங்களில் ஆக்கிய வேதாந்த சாரமாகிய விவேகசூடாமணியின் கருத்தைக் கூறுவதும், கண்ணனுடைய வள்ளல் என்பவர், ‘ஒடுவில் ஒழுக்கம்’ என்ற நூலைத் தமிழில் தந்து, தத்துவங்களைக் கூறினார் என்றும், வளமிகு வாழ்வு நல்கும் வேதாந்தத்தைப் பல எளிய உதாரணங்களால் விளக்குவதும், தொல்காப்பியத்தில் வேதாந்தக்கூறுகள் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதும், சதாசிவ பிரமேந்திரரின் வாழ்வும் வாக்கும் விளக்கப்படுவதும், அருள்நெறியில் தழைத்த ஆவுடையக்காள் பாடல்களை விளக்குவதும், நுாலாசிரியரின் அறிவின் திறனுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
நுாலில் காணும் வடசொற்களின் பொருள் தெரிய, நூலின் இறுதியில், பொருளகராதி வெளியிட்டிருப்பது பலருக்கும் உதவும்.
படிக்கவும், சிந்திக்கவும் பயனுள்ள நுால்.
– பேரா டாக்டர் கலியன் சம்பத்து

You may also like

Recently viewed