ஆழ்மனமும் அதன் அபரித ரகசியங்களும்


Author: ஏ.எல்.சூர்யா

Pages: 0

Year: 2017

Price:
Sale priceRs. 300.00

Description

உலகக் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் அவர்களுக்கு என்ன ஆற்றல் இருக்கிறதோ
அதே ஆற்றல் மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. இந்த
புத்தகத்தின் வாயிலாக எனது எழுத்தின் நோக்கம் உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை
தூண்டச் செய்வதே. எங்காவது எனது எழுத்து உங்களை காயப்படுத்துமாயின்
மன்னிக்கவும். அது எனது நோக்கமும் அல்ல. வாழ்க்கையில் நாம் அனைவரும்
விழிப்புறும் தருணமே அதி அற்புதமான தருணம். இதுவே எனது ஆழ்மனதின் மூலம்
நான் அறிந்து கொண்ட உண்மை. அதனால் என் ஆழ்மனதிற்கு நன்றி. இதனை படித்து
உங்கள் ஆழ்மனதை இயக்கி வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
காக்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் காப்பாற்றப் படாவிட்டாலும்
பரவாயில்லை. நாக்கு ஒன்றை மட்டுமாவது கட்டாயம் காக்கப்படவேண்டும். ஏனென்றால்
எல்லா துன்பங்களுக்கும் நாக்கு தான் காரணம்.
எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி. நான் பட்ட துன்பங்கள் அனைத்திற்கும்
நன்றி. அன்று என்னை அவைகளை பொறுத்துக் கொள்ளச் செய்ததற்கு நன்றி.
அத்துன்பத்திலிருந்து நான் பல அனுபவங்களை பெற்றமைக்கு நன்றி. அத்துன்பத்தை
ஆழ்ந்து அனுபவித்ததில் வரங்கள் பல பெற்றமைக்கு நன்றி. இன்று வரை எனக்கு எது
தகும் என்பதை அறிந்து அவற்றை இறைவன் எனக்கு அளித்துக் கொண்டிருப்பதற்கும்
நன்றி.

You may also like

Recently viewed