Author: சுப்ரதோ பாக்ச்சி

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

ஆரம்பித்த புதிதில் சிறப்பாக இயங்கிவந்த நிறுவனங்கள் கூட சில ஆண்டுகள் கழித்து அவற்றின் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் தோற்றுவிடுகின்றன. 'THE ELEPHANT CATCHERS' (உச்சம் தொட) என்கிற இந்தப் புத்தகத்தில்,நூலாசிரியர் சுப்ரதோ பாக்ச்சி, ஏன் இப்படி நடக்கிறது என்று ஆராய்வதோடு வளர்ச்சியின் அடுத்த நிலைக்குச் செல்ல அந்த நிறுவனங்களும் ,அதை சார்ந்தவர்களும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தனது அனுபவத்தின்மூலம் கற்றப் படிப்பினைகளை 'வடித்திறக்கி இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.

உண்மையிலேயே வளர்ச்சியில் அக்கறை கொண்ட நிறுவனங்கள் 'அளவுத் திட்டம்' குறித்த கருத்தை ஏற்றுக் கொள்வதோடு அந்நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அது சீராகப் பரவுவதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்கிறார். நீங்கள் உங்கள் பிராண்டை தொடர்ந்து வளர்த்துவருவதோடு அதன் அடையாளத்தை புதுப்பித்து வருகிறீர்களா அல்லது அப்படியே தேக்கநிலையை அடைந்து சீரழிந்து போகட்டும் என்று விட்டுவிடுகிறீர்களா? உங்களுடைய விற்பனை[ பிரிவில் 'வேட்டைக்காரர்கள்' இருப்பதுபோல் விவசாயிகளும் இருக்கிறார்களா? அல்லது எப்போது சால்மன் மீன் தன வாயில் வந்து விழும் எனக் காத்திருக்கும் 'கிரிஸ்லி கரடி போன்ற சோம்பேறிகள் இருக்கிறார்களா? போட்டிகள் மிகுந்த சூழ்நிலையில், நீங்கள் வழக்கமற்ற வழிகளில் அல்லது ஆதாரங்களிலிருந்து கற்றுக் கொள்வதோடு , புதுமையாக எதையாவது சிந்திக்கிறீர்களா? ஆலோசகர்களை எப்படி கையாளுவது, உங்களுக்குப் பிறகு நிறுவனத்தை நிர்வகிக்கப் போவது யார் , உத்தி ,இணைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எப்படி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும், வளர்ச்சி சம்பந்தப்பட்ட பெரும்பாலான விஷயங்கள் குறித்த விலைமதிப்பற்ற கருத்துகள் என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக இந்த ' 'THE ELEPHANT CATCHERS' என்கிற புத்தகம் இருக்கின்றது.

You may also like

Recently viewed