நான்காவதாக,சிறைவாசி இரா.பொ.இரவிச்சந்திரனின் இந்த புத்தகம்!
இராஜீவ்காந்தி கொலைவழக்கில் கால்நூற்றாண்டுக்கும் மேல் ஆயுள் தண்டனை கைதியாகச் சிறைப்பட்டிருப்பவர்களில் ஒருவர். இவர் தமிழகத்தைச் சார்ந்த, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதைவிட, ஈகம் செய்யத் துணிவுகொண்டு, இளம் வயதிலேயே ஈழம் சென்று, போர்செய்யும் உத்திகள் பயின்று, பகை எதிர்த்துக் களம் நின்று, வீரம் சிந்திய விடுதலைப் புலி என்பதே மிகவும் பொருத்தமாகும். தோழர் ஏகலைவன் அவர்களின் அரிய முயற்சியில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் அதனை விரிவாக விவரிக்கிறது..
ராஜீவ் கொலை வழக்கின் மர்ம பக்கங்களை தனது 'ராஜீவ் கொலை வழக்கு: மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற நூலின் மூலமாக வெளியுலகத்துக்கு கொண்டு வந்தவர் ஏகலைவன். அந்நூல் பெரும் வெற்றி பெற்றதோடு, இவ்வழக்கின் புலனாய்வையும், அதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணைகளையும் கேள்விக்குள்ளாக்கியது. இதைப் போலவே பரபரப்பைக் கிளப்பும் மற்றொரு நூல்தான் இது...
இரா.பொ.இரவிச்சந்திரன்.சொந்த ஊர்,விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை.1970 ஏப்ரல் 29ல் பிறந்தவர்.16 வயதில்,தன்னார்வத்தால் யாழ்ப்பாணம் அடைந்து ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ இயக்கத்தில் இணைத்துக்கொண்டவர்.
முதல் ஈழப்போர்,ஈழம் மீதான இந்திய ஆக்ரமிப்புக்கு எதிரான போரிலும் பங்கேற்றவர்.1989ம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து விலகி,தமிழகம் திரும்பி 1990 ஏப்ரலில், ‘தமிழ் தேசிய அரசியல்,சமூக,விடுதலை இயக்கத்தை தோற்றுவித்தவர்.
இராஜிவ்காந்தி கொலை வழக்கில் 16வது குற்றவாளி.தூக்கு தண்டனை பெற்ற இருவருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.தொடர்ந்து 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.இப்போது மதுரை மத்திய சிறையில்.....
You may also like
Recently viewed
Free shipping on orders over ₹500.
Standard shipping rates for orders below ₹500.
Customer Support
We are here to help you from 10am-7pm, Monday to Saturday.
Secure payments
Multiple payment options. COD is also available.
International Customers
Please Whatsapp us at 95000 45609 with your requirements.