Description
நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப்படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்துபவை அவரது குறுநாவல்கள். சிறுகதையின் செரிவுடனும் நாவலின் களப்பரப்புடனும் அவர் எழுதிய ஏழு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்.
ஆண், பெண் உறவின் சிக்கலை, மனக் கோணலை, பரிதவிப்பை, ஆன்மீகப் பதற்றத்தை, நிறைவை, கச்சிதமான வடிவத்தில் மனதை ஈர்க்கும் நடையில் இந்த நீள் கதைகள் முன்வைக்கின்றன.