அமைப்பாய்த் திரள்வோம்


Author: தொல். திருமாவளவன்

Pages: 520

Year: 2018

Price:
Sale priceRs. 475.00

Description

தலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.உழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்.இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர் திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மியளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்தகத்தைப் பார்த்து மலைத்துப் போகிறேன். அவரது வித்தகத்துக்கான சான்று - இந்தப் புத்தகமே ஆகும்.- கவிஞர் தணிகைச்செல்வன்.

You may also like

Recently viewed