2 ஜி அவிழும் உண்மைகள்


Author: ஆ. இராசா

Pages: 304

Year: 2018

Price:
Sale priceRs. 200.00

Description

மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தி.மு.கவின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்துவந்தது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தார். 2 ஜி வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தவறாக வழிநடத்தப்பட்டதாக விடுதலை பெற்ற ஆ.ராசா தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், 2ஜி வழக்குத் தொடர்பாக ஆ.ராசா, ``2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்'' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார்.

You may also like

Recently viewed