Description
தமிழ் தேசத்தை நிறுவ நினைத்த பிரபாகரன் என்கின்ற மனிதனின் அர்ப்பணிப்பை கொண்டாடும் விதமாக செம்பூர் ஜெயராஜ் மற்றும் இலையூர் பிள்ளை இருவரும் ஆய்வு செய்து உருவாக்கியதுதான் "வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலை போராட்ட வரலாறு'.ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிகச்சிறந்த ஒரு ஆவணமாக இந்தநூல் இருக்கிறது. முதல் 650 பக்கங்களுக்கு பிரபாகரனின் வரலாறும் அந்த வரலாற்றை தொட்டுக்காட்டக்கூடிய நிகழ்வுகளும்,மீதம் உள்ள 650 பக்கங்களுக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் 10 பிரிவுகள் வெளியிட்டுள்ள தரவுகளை திரட்டி கொண்டு வந்துள்ளஆவணங்களே இந்நூல்.ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு இது.