Description
*என் நினைவில் சே - அலெய்டா மார்ச்*
(மாபெரும் வரலாற்று நாயகனின் காதல் வாழ்க்கை)
*அலெய்டா மார்ச்* முதல்முறையாக இந்த நூலில் தன்னுடைய துணைவரான
*எர்னஸ்டோ சே குவேரா* பற்றியும் தங்களுடைய அற்புதமான காதலை பற்றியும் ,
அழகாக நினைவு கூர்கிறார்.
*கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக தாங்கள் முதன்முதலாகச சந்தித்துக் கொண்ட நாட்களில் தொடங்கி, பத்து ஆண்டுகள் பூர்த்தியடையாத ஒரு காலகட்டத்தில், பொலிவியாவில் ஏகாதிபத்திய கொடுங்கோலர்களால் *சே* படுகொலை செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற துயரமான கணம்வரை அவர்கள் இணைந்து நடத்திய வாழ்க்கையினை விவரிக்கிறார்.
*அலெய்டா அவர்கள்* சே அவர்களுடனான எதிர்காலத்திற்கும் தங்கள் குடும்பத்திற்குமான தங்களிடையே பகிர்ந்துகொண்ட அரசியல் கனவுகளை , தீராத மோகமும் - துயரமும் கொண்டு விவரிப்பதே இந்நூல்! .
நம் காலத்தின் மாபெரும் அரசியல் சின்னங்களுள் ஒன்றாகிவிட்ட தனிப்பட்ட அளவில் எனக்கு மிகவும் பிடித்த
ஒரு மனிதரின் வாழ்க்கை பற்றி இவ்வளவு நெருக்கமான ஒரு பார்வையை இதுவரை யாருமே வாசகர்களுக்கு அளித்ததில்லை, அதனால் அவர் துணைவி எழுதிய இந்நூலை தங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.
மேலும் இந்நூலில் *அலெய்டாவிற்கு சே எழுதிய கடிதங்களும், கவிதைகளும் ,சிறுகதையும் இடம்பெறுகின்றன. அத்துடன் முன்பு எப்போதும் பிரசுரமாகாத அவர்களின் குடும்ப ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்ட நிழற்படங்களும் இடம்பெறுகின்றன! .குறிப்பாக *சே* அவருடைய ரகசிய பொலிவியா பயணத்திற்கு ஆயத்தமான போது மாறுவேடமிட்டு *சேவும் அலெய்டாவும்* எடுத்துக்கொண்ட இறுதிப் புகைப்படங்களும் அடங்கும்.
இந்த நூல் *உலகப் புகழ்பெற்ற புரட்சியாளர்* ஒருவரின் மறைவையும் - தன்னுடைய தனிப்பட்ட சோகத்தை எதிர்கொண்ட *அலெய்டாவின்* மனவலிமையும் , ஒரே நேர்க்கோட்டில் பேசுகின்றது , *போர்ச் சூழல், வீரம், குழந்தைகளை வளர்க்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சி போன்றவற்றையும் வெளிக்கொணர்கிறது*.