தம்மபதம் - பாகம் 8


Author: டாக்டர்என்.ரமணி

Pages: 441

Year: 2017

Price:
Sale priceRs. 300.00

Description

'உன்னையே நீ அறிவாய்' என்பார் ஸாக்ரெட்டெஸ், புத்தரும் உன்னைத் தெரிந்துகொள்' என்கிறார். இருவரையுமே தவறாகப் புரிந்துகொண்டார்கள். புத்தரோ உள்ளே யாருமில்லையென்பதைத் தெளிவாகவே சொல்லிவிடுகிறார். பார்ப்பது என்ற நிகழ்வு இருக்கிறது. பார்ப்பவர் என்று யாருமில்லை . புரிதல் இருக்கிறது. புரிந்துகொள்பவர் , 'யாருமில்லை. தெரிந்துகொள்வது இருக்கிறது. தெரிந்துகொள்பலர் யாருமில்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பொருட்சார்ந்த எதார்த்தம் என்ற நிலையில் வேறு எவரும் எதுவும் , இல்லாத வகையில் புத்தரோடு நவீன அறிவியல் ஒருங்கு நிற்கிறது. நாளுக்கு நாள் அறிவியல் புத்தருக்கு அணுக்கமாகிக் கொண்டே வரும் என்பதால் எதிர்காலத்தில் புத்தர் வெகு சிறப்புப் பெறுவார். புத்தருடைய மொழியில் அறிவியல் பேசப் போகிறது. சக்தி இருக்கிறது. ஆனால் , பொருளில்லை என்கிறது. அகவுலகைப் பற்றிப் பேசும்போது புத்தரும், இதையே சொல்கிறார். சக்தி இருக்கிறது. இயக்கம் இருக்கிறது. நிகழ்வுகள் இருக்கின்றன. ஆனால் பொருளேதும் இல்லை, அகங்காரம் இல்லை, 'உன்னைத் தெரிந்து கொள்' என்பது 'நீ இல்லாததைத் தெரிந்து கொள்' என்பதாகும்.

You may also like

Recently viewed