Description
மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். இலக்கியத்தில் தோய்ந்ததால் ஏற்பட்ட பார்வை இது. கணக்குத் தணிக்கையோடு இணைத்து மனிதாபிமானத்துடன் ஒரு விஷயத்தை எப்படி அணுகமுடியும் என்பதை இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார் ஆசிரியர். வழக்கமான நியாய தர்மத்துக்கு அப்பாற்பட்டு, கறார் தன்மைக்கு வெளியே, எதார்த்தத்தை நெகிழ்ச்சியோடு புரிந்துகொண்டதன் விளைவு இந்தக் கதையில் வரும் ஸ்ரீராமன் பாத்திரம். கேவல் காந்தி, அன்பு, ஞானா என்று ஒவ்வொரு பாத்திரமும் நல்ல குணங்களின் அற்புத வார்ப்புகள், இலக்கியம் இத்தகைய அற்புத குணநலர்களை முன்னிலைப்படுத்தும்போது, மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுகிறது. அதுதான் ஒரு நாவலைப் படித்து முடிக்கும்போது கிடைக்கும் பேருவகை