Description
பண்டைய இந்தியாவின் சூத்திரர்களின் வரலாறு குறித்த ஒரு அசலான ஆய்வு நூல். பண்டைய இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்று ஆய்வில் நிகரற்ற ஆளுமையான பேராசிரியர் ஆர்.எஸ்.சர்மா அவர்கள் எழுதிய காலகட்டத்தில் பதிப்பு கண்ட இலக்கிய, தொல்பொருள் ஆய்வு அனைத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு கறாராக அறிவியல் பூர்வமாக அணுகி எழுதிய நூல். சூத்திரர்களது பண்டைய வரலாற்றை மட்டும் கூறுவதாக இல்லாமல் அதனை அவர்களுடைய பிற்கால மற்றும் சமகால நிலையோடும் இணைத்து விளக்கும் நூல்.