ஸ்ரீ குரு சரித்திரம்

Save 17%

Author: வேணு சீனிவாசன்

Pages: 392

Year: 2021

Price:
Sale priceRs. 250.00 Regular priceRs. 300.00

Description

ஸ்ரீதத்தாத்ரேயரின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த அற்புதங்கள், அவர் பக்தர்களுக்காக எடுத்த திவ்ய சொரூபங்கள், ஆகியவை அடங்கிய இந்த ஸ்ரீகுரு சரித்திரம் என்ற நூலை சாயம் தேவனின் பரம்பரையில் வந்த நாமதாரகன் என்ற பக்தர் மராத்தி மொழியில் ஓவி என்ற செய்யுள் வடிவத்தில் எழுதி இருக்கிறார். குரு சரித்திரம் மராத்தி மொழியில் ஞான, கர்ம பக்தி என்னும் மூன்று காண்டங்களாக எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீநரசிம்ம சரஸ்வதி சுவாமிகளின் சீடரான ஒரு சித்தர், தன் குருநாதரின் பெருமைகளை நாமதாரகன் என்ற பக்தருக்கு விளக்கிக் கூறியதாக அமைந் திருக்கிறது. குருவின் உபதேசங்கள் அடங்கிய குருசரித்திரம் என்ற இந்த நூலை படித்தால் சகல கர்மவினைகளும் நீங்கும், சகல ஐஸ்வர்யங்களும் சேரும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை. இந்த புத்தகத்தை படிப்பதன் மூலமாக ஸ்ரீதத்தாத்ரேயரின் மீது பக்தியையும், நம்பிக்கையையும் நம்மால் வளர்த்துக் கொள்ள முடியும். அந்த நம்பிக்கை நமது வாழ்வின் தொல்லைகளைத் தீர்க்கும், துன்பங்களைப் போக்கும், சகல நன்மைகளையும் கொண்டு வந்து சேர்க்கும்.

You may also like

Recently viewed