Description
உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக் காட்டுகிறது. செவ்வியல் படைப்பான இந்த நூல் ஓர் அசல் சுயவுதவிப் பெட்டகம். இது உலகெங்கும் எண்ணிக்கையற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளாற்றலை வழங்கிக்கொண்டிருக்கிறது. அன்பு எவ்வாறு மனிதனுக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி, வாழ்க்கையின் மிகக் குதூகலமான அனுபவமாக அது ஆக முடியும் என்பதை இந்த நூலிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.