திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி-1,2


Author: முல்லை பதிப்பகம்

Pages: 360

Year: NA

Price:
Sale priceRs. 400.00

Description

திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி – 1ல், மூல பாட ஆய்வில் திருத்திய திருமந்திரப் பாடல்களில் மூலம் மட்டும் அடங்கும். பகுதி – 2ல், மூல பாட ஆய்வில் திருத்திய, சொல் பிரித்த திருமந்திரப் பாடல்கள் மட்டும் தொகுக்கப்பட்டு உள்ளன.
டாக்டர் சுப.அண்ணாமலை, ஏற்கனவே அச்சில் வெளிவந்த, 11 திருமந்திரப் பதிப்புகளையும் பழமையான ஏட்டுச் சுவடிகளையும் ஒப்பாய்வு செய்து, பாடல்களை தந்திரங்கள் அடிப்படையில் பிரிக்காமல், எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து அதற்கான விளக்கங்களையும் வெளியிட்டார்.
செம்பதிப்பில், 49பாடல்கள் இரண்டு முறை வந்தனவாக விலக்கி, 2,998 பாடல்களைக் காட்டி அவற்றுள்ளும், 440 பாடல்கள் இடைச் செருகலாகலாம் எனக் காட்டி, திருமூலர் வாக்காக, 2,558 பாடல்களைத் தந்துள்ளார். ஏற்கனவே வந்த மூல பாட ஆய்வுப் பதிப்பில் (1997) ‘கூறியது கூறல்’ பொருட் சிறப்பு இன்மை, பொருட் பிழை, யாப்புப் பிழை, இலக்கணப் பிழை, வேறு நுாற் செய்தி இப்படியாக இடைச் செருகலுக்கான காரணங்களைக் காட்டி, தன் ஒப்பாய்வுக்கு வலுவூட்டியுள்ளார் சுப.அண்ணாமலை.
முற்றிலும் மாறுபட்ட அமைப்பு முறை என்றாலும், திருமந்திரத்தை எளிதாகப் பயிலும் வண்ணம், இடைச் செருகல்களை சாய்வெழுத்தாகத் தந்து, பிழையின்றி தொகுக்கப்பட்டுள்ள இந்நுால், மாணவர்கள் மட்டுமின்றி அனைவருமே எளிதில் படிக்கும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க முயற்சி.
பின்னலுாரான்

You may also like

Recently viewed