Description
இவரின் எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள் நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக் கரங்களில் சிதறுண்டு உயிர் தப்பிய ஒருவனின் துயர்மிகு வரிகளையே இக்கதைகளில் நாம் வாசிக்க முடிகிறது.