Description
200 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய முறைகள், பண்பாட்டு போக்குகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யும் நூல் இது. இந்நூலுக்கு ஜி. யு. போப் விளக்கக் குறிப்புகள் எழுதியுள்ளது அன்றைய தமிழ்ச சமூகத்தை பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவுகின்றது. பின்வரும் தன்மைகளில் இந்நூல் அமைந்துள்ளது. – பிராமணர்களின் வாழ்க்கை மற்றும் பண்பாட்டுச் சடங்குகள்… – சமண, பௌத்தர்களின் சமய மரபு – கிருத்துவர்களை இந்து சமயத்தினர் ஏற்காமைக்கான காரணம் – உடன்கட்டையேறுதல், விதவைகள் நிலை, குழந்தைத் திருமணம், சாதிய முறைகள், சமஸ்கிருத மொழியின் இயல்பு… என இப்படி பல்வேறு கூறுகளைப் பற்றிய முழுமையான பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. ஆய்வாளர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல்.