Description
நம் நாட்டில் வாழ்க்கையில் முப்பது வருஷங்கள் என்றால் பாதிக்கு மேல் என்றுதான் அர்த்தம். சாதாரண மனோபாவத்தில்கூட ஒரு மாறுதல் அவர்களுடைய முப்பதாவது வயசில் நேருகிறது என்பது அனுபவபூர்வமாகக் காண்கிற உண்மை. அறிவும் அனுபவமும் ஒரு மனிதனுடைய ஆயுளில் சற்றேறக்குறை அவனுடைய முப்பதாவது வயசில் கூடுகின்றன என்று சொல்ல வேண்டும்.
சாதாரணமாகத் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அதிகமில்லாத மனிதனும்கூட, அந்த வயசில் சற்று அதிகமாகத் தத்துவ விசாரத்தில் அடிப்படையான மேன்மை ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறான் என் அனுபவம். காலதேச வர்த்தமானங்களை ஒட்டி இன்றைய முப்பது வயசு வாலிபனுக்கு மனசில் தோன்றக்கூடிய சிந்தனைகளுக்கு வாழ்க்கை உருவம் கொடுக்க முயன்றிருக்கிறேன் இந்த நாவலில்.