நான் பிரம்மம்


Author: சி.அர்த்தநாரிஸ்வரன்

Pages: 407

Year: 2016

Price:
Sale priceRs. 420.00

Description

இராம் மனோகர் - நான் பிறந்த 16 வது நாளே எனக்கு இராம் மனோகர் என்று பெயரிட்டு விட்டார்கள். உங்களுக்கும் அப்படித்தான். ஆனால், நான் இராம் மனோகர் என்பது எப்பொழுது எனக்குத் தெரிகிறது ? நான் என்கிற அஹங்கார நிலை, சித்த நிலையாக விரிந்து மேலும் அது புத்தி நிலைக்கு விரிவடையும் பொழுதுதான் நான் இராம் மனோகர் என்பது எனக்குத் தெரிகிறது. அது போலவே உங்கள் புத்தி நிலைக்கு நீங்கள் ப்ரம்மம் என்பது புலப்படும் பொழுது நீங்கள் அதைத் தெரிந்து கொள்வீர்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா ? அது அப்படித்தான் சூக்கும விஷயங்களை நம் அறிவு உள்வாங்கிக் கொள்ளும் வரை சற்று குழப்பம் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஒன்று, அறிவு அந்த எல்லைக் கோட்டை தொட்டு விட்டாலே போதும், அந்த சூக்குமமானது உங்கள் அறிவை ஈர்த்துக் கொள்ளும். அதன் பிறகு கதிரவனைக் கண்ட தாமரை மெல்ல மெல்ல மலர்ந்து விரிவது போல சூக்கும உலகம் உங்கள் அகக் கண்ணில் ஒவ்வொன்றாய் மலரும்.

You may also like

Recently viewed