Description
"புறநானூற்றுப் பாக்கள் மன்னர்களின் கால வரிசைப்படியோ, தினை அடிப்படையிலோ, பாடிய புலவர்களின் வரிசைப்படியோ தொகுக்கப்படவில்லை. ஒரு மன்னனைப் பற்றிய பாடல்களும் கூடத் தொடர்ச்சியாக அமையாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்துள்ளன. இதனால் கற்போர்க்குத் துன்பம் உண்டாகிறது. இதனை உணர்ந்து அறிஞர் பெருந்தகை சாலமன் பாப்பையா அவர்கள் தமிழக வரலாற்றுப் புதையலான இந்நூலினை வரலாற்றுப் பார்வையிலும் இன்றைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் வரிசைப்படுத்தியுள்ளார். இது புதுமையாகச் செய்ய வேண்டும் என்னும் நினைப்பில் எழுந்த பதிப்பன்று. புறநானூற்றுப் புரிந்துகொள்ள உதவ வேண்டும் என்னும் உயரிய நோக்கில் உருவான பதிப்பு."- முனைவர் தெ.ஞானசுந்தரன்.